இந்திய அரசியலில் இன்றைய தேதிக்கு தவிர்க்க முடியாத அரசியல் கட்சிகளில் ஒன்று பாரதிய ஜனதா கட்சி. பாரதிய ஜனசங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை தலைவராகக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினர். 1980 ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, ஆண்டுதோறும் அதே நாளில் பாஜக தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது.
1951 ஆம் ஆண்டு திரு. சியாம பிரசாத் முகர்ஜி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது பாரத ஜன சங்கம். அப்போதைய பிரதமர் திரு. ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து விலகி ஜன சங்கத்தை தோற்றுவித்தார். அடுத்த ஆண்டே, அதாவது 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரதத்தின் முதலாவது பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட ஜன சங்கம் 3 இடங்களை கைப்பற்றியது. பின்னர் 1953 ஆம் ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீருக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்ததாக கைது செய்யப்பட்ட திரு. சியாம பிரசாத் முகர்ஜி அவர்கள் அதே ஆண்டு ஜூன் மாதம் சிறையிலேயே மர்ம காய்ச்சலால் இறந்தார் என அம்மாநில சிறைத்துறை தெரிவித்தது. இன்றளவிலும் அவர் மரணத்தில் உள்ள மர்மம் விலகவில்லை.
திரு. சியாம பிரசாத் முகர்ஜி அவர்களின் மறைவுக்கு பின்னர் திரு. பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்கள் ஜனசங்கத்தின் பொதுச்செயலாளராக 15 ஆண்டுகள் பதவி ஏற்றுக்கொண்டு ஜன சங்கத்தை வளர்த்தார். பின்பு 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி அன்று லக்னோ நோக்கி ரயிலில் பயணித்து கொண்டிருந்தபோது உத்தரபிரதேசம் முகல்சராய் சந்திப்பு ரயில் நிலையத்தில் திரு. பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்கள் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.அவரின் மறைவுக்கு பின்பு ஜனசங்கத்தின் தலைவராக திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து பெரும்பான்மையுடன் இடங்களை கைப்பற்றிய ஜன சங்கத்தின் கூட்டணி திரு. மொரார்ஜி தேசாயை பிரதமராக கொண்டு காங்கிரஸ் அல்லாத மத்திய அரசின் ஆட்சியை முதன் முதலில் பாரதத்தில் நிறுவியது. பின்னர் நடைபெற்ற உட்கட்சி பூசல்களால் ஜன சங்கம் கலைக்கப்பட்டது. பின்னாளில் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவித்தார். அன்று முதல் படி படியாக வளர்ந்த பாஜக தற்போது உலகின் மிக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
பா.ஜ.க வின் கொள்கைகளுள் "ஒருங்கிணைந்த மனிதநேயம்" என்பது முக்கியமானதாகத் திகழ்கிறது. வலதுசாரி கொள்கை நிலைப்பாடுடைய பா.ஜ.க, சமூக பாதுகாப்பு மற்றும் முற்போக்கு ஆகிய கொள்கைகளுடையது. இக்கட்சியின் பெரும்பான்மையான கொள்கைகள் இந்தியாவின் பாரம்பரிய கலாசாரத்தைத் தழுவியே அமைந்துள்ளன. இக்கட்சியின் சாசனத்தில் அதன் குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் முதல் தலைவரானார். முன்பிருந்த கட்சியின் காவிக்கொடி இப்போது காவியும், பச்சையும் கொண்ட கொடியாக மாறியது.
முன்பு கட்சியின் வழிகாட்டுக் கொள்கையாக ‘ஒன்றிணைந்த மானுட வாதம்’ இருந்தது. இப்போது அது ‘காந்தீய சோசலிச’மாக மாறியது. இவையெல்லாம் கட்சி உறுப்பினர்கள் ஜனதா கட்சியிலும், ஜே. பி இயக்கத்திலும் அடைந்த அனுபவத்தின் தாக்கமே.
பாரின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக நம் பாரத நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் திகழ்கிறார். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆவார்.
குஜராத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், தனது தந்தையின் டீக்கடையில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த தேசத்தின் மீது கொண்ட அன்பும் தொலைநோக்கு சிந்தனையும் அவரை இந்த தேசத்தை ஆளும் சிம்மாசனத்தில் அமர வைத்தது.
கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் இருக்கும் திரு. நரேந்திர மோடி அவர்கள் தோல்வியையும் சந்தித்தது இல்லை, ஆட்சியை அமைக்கவும் தவறியது இல்லை. தொடர்ந்து 13 வருடங்கள் குஜராத் முதல்வராகவும், அதனை தொடர்ந்து 11 வருடங்கள் பாரத பிரதமராகவும் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறார்.