பெயர் : G.K.நாகராஜ்
படிப்பு : Engineer (Electrical & Electronic)
வசிக்குமிடம் : கோயம்புத்தூர்
தொழில் : இயந்திரங்கள் உற்பத்தி,வார்ப்பு தொழிற்சாலை மற்றும் இயற்கை விவசாயம்
அரசியல் : மாநில தலைவர் விவசாயி அணி
தமிழ்நாடு – பாஜக
பிறந்த தேதி : 15.10.1969

குறிப்பு:-

  • கல்லூரி படிப்பை முடித்தவுடன் குஜராத் சென்று தனிமனிதனாக ஹை-டெக் இந்தியா என்ற நிறுவனத்தை துவங்கி ஏறக்குறைய 15 ஆண்டு காலம் குஜராத் மாநிலத்தில் தனது தொழிலை விரிவுபடுத்தினார்.
  • 2001-ல் குஜராத் தேர்தலில் தமிழர் வாழும் மணிநகர் பகுதியில் மோடிஜிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
  • குஜராத் மாநிலத்தில் மோடிஜியால் ஏற்பட்ட மாநில வளர்ச்சியைக் கண்டு தமிழகத்தில் அவரைப் பற்றி பேசியதோடு தமிழகத்திலும் அதைபோன்று ஆட்சி மலரவேண்டுமென்று முயற்சி மேற்கொண்டார்.
  • 2009-ல் கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை மாநாட்டிற்கு தலைவராகப் பொறுப்பேற்று பத்து இலட்சம் பேருக்கு மேல் திரட்டி தமிழகத்தின் மேற்குமண்டல வளர்ச்சிக்கு குரல்கொடுத்தார்.
  • ரோட்டரி சங்கத்தின் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்க 2005-ல் ரூ.10 இலட்சம் நிதி கொடுத்து தான்”பெருங்கொடையாளர்”(Major Donor) ஆனதோடு மற்றோரையும் போலியோ சொட்டுமருந்திற்கு நிதி கொடுக்க ஊக்குவித்தார்.
  • கோவை சிறுதுளி அமைப்பில் இணைந்து நொய்யல் யாத்திரையில் பங்கெடுத்து நொய்யல் நதியை சீரமைக்க குரல்கொடுத்தார்.
  • விவசாயிகளை ஒன்றுதிரட்டி அவினாசி-அத்திக்கடவு நீராதாரத் திட்டத்தை முன்னெடுத்து தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திட்டம் துவங்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்.
  • அனைத்து சமுதாயங்களையும் ஒருங்கிணைத்து தமிழக முதல்வருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்தின் கலாச்சாரம்,பண்பாடு பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
  • நாட்டுமாடுகளின் நன்மை உணர்ந்து அவற்றை ஏழை,எளிய மக்களுக்கு தானமாக வழங்குவதோடு பல இடங்களிலும் கோ பூஜை நடத்தி அதன் மகிமையை கூறிவருகிறார்.
  • இவருக்கு இரண்டு மகன்கள்.ஒருவர் மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு.மற்றொருவர் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துவருகிறார்.
  • விவசாயக்குடும்பத்தில் பிறந்த இவர் இந்திய நாட்டின் மீதும்,அதன் கலாச்சாரத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர்.அது காக்கப்பட வேண்டுமென்று பல தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ந்து பேசிவருகிறார்.
  • இவருடைய அம்மாவழி தாத்தா தனது இரண்டு மகன்களில் ஒருவரை இந்தியா பாகிஸ்தான் சண்டையின்போது இராணுவத்திற்கு போர்புரிய அனுப்பியதோடு இராமாயணம்,மகாபாரதம் ஆகியவை கூறும் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து,இசைக்குழுவோடு கிராமங்களுக்கு சென்று பரப்புரை மேற்கொண்டார்.