தேசியமூங்கில் வளர்ப்பு திட்டம்

தேசியமூங்கில் வளர்ப்பு திட்டம் மூங்கில் சாகுபடி மூங்கில் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் ஆகும். காடுகள் அல்லாத அரசு மற்றும் தனியார் நிலங்களில் மூங்கில் வளர்ப்பை அதிகரிக்க இத்திட்டம் உதவுகிறது.

ஒரு லட்சம் ஹெக்டர் அளவிற்கு மூங்கில் சாகுபடி பரப்பை அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 329 மூங்கில் நாற்றாங்கால்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டத்திற்காக ரூ. 1290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டு ரூபாய் 4000 மானியமாக ஒரு ஹெக்டருக்கும் அடுத்த ஆண்டு முதல் வளர்ச்சிக்கு ஏற்றவாறும் மானியம் வழங்கப்படுகிறது. பின்னிருப்பு மானியமாக ரூபாய் 25000 விவசாயிகளுக்கும் பொது இடங்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படுகிறது.

தேசியமூங்கில் வளர்ப்பு திட்டத்தில் அனைத்து மூங்கில் வளர்க்கும் விவசாயிகளும் பயனடையலாம். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.

தொடக்கம் தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டம் ஏப்ரல் 25 2018 மத்திய அரசால் தொடங்கப்பட்டது
நோக்கம் இத்திட்டம் மூங்கில் சாகுபடி பரப்பளவை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
பயனாளிகள் : • விவசாயிகளுக்கான மூங்கில் வணிகம் பற்றிய பயிற்சி வழங்குதல்.
• மூங்கில் சார்ந்த சிறு தொழில் அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி பயிற்சி வழங்குதல்.
திட்ட பயனாளிகள் : அனைத்து விவசாயிகள்.
இணையதள முகவரி: தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டம் குறித்த விரிவான தகவல்களை www.nbm.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
திட்ட செயல்பாடு : தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டத்திற்காக ரூ .1290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகம்.
இந்திய அளவில் பயனடைந்த விவசாயிகள் : இதுவரை நாடுமுழுவதும் மூங்கில் சாகுபடி 7337 ஹெக்டர் சாகுபடி நடைபெற்று உள்ளது.
whatsapp icon