மண் வள அட்டை திட்டம்
மண்ணின் தன்மை, பாசன நீர், பயிர் மற்றும் பிற உயிரியல் பண்புகளின் அடிப்படையில் மண்ணின் வளத்தையும் தரத்தையும் இந்த மண்வள அட்டை நிர்ணயிக்கிறது .
விவசாயிகள் சொந்த அனுபவத்தையும், அறிவுத்திறனையும் கொண்டு மண்வளத்தைக் கண்காணிக்கவும், மேம்படுத்தவும் இந்த திட்டம் பயன்படுகிறது. . காலப்போக்கில் மண்வளத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதற்கான மேம்பாட்டு முறைகளையும் இந்த அட்டையில் பதிவு செய்து கொள்ளலாம்
ஒரு இடத்திலுள்ள மண்ணின் தரத்தினை மற்றொரு இடத்திலுள்ள மண்ணின் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இந்த அட்டையின் நோக்கமல்ல ஆனால், ஒரு மண் எந்த அளவுக்கு பயிர் உற்பத்தித் திறன் கொண்டது என்பதை இந்த அட்டையைக் கொண்டு அறிய முடியும்.
சிறப்பான முறையில் உள்ளீடுகள் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவுவதற்காக மற்றும் தனிநபர் விவசாய நிலங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உரங்கள் பயிர்வாரி பரிந்துரைக்கப்படும்.
ஒரு விவசாயிக்கு சொந்தமான ஒவ்வொரு நிலத்திற்கும் வழங்கப்படும் ஒரு அச்சடிக்கப்பட்ட அறிக்கையாகும் . இதில் 12 அளவுகோல்களுக்கேற்ப மண்ணின் நிலை குறித்த தகவல்கள் உள்ளடங்கி இருக்கும் . இதில் விவசாய நிலத்திற்கு தேவையான உரங்கள் மீதான பரிந்துரைகளும் மற்றும் மண் திருத்த ஆலோசனையும் அடங்கி இருக்கும்.
மண் வள அட்டை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் அதன் பரிசோதனை முடிவுகள் ஆலோசனைகள் ஆகியவை இதில் உள்ளடங்கும் .மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மண்வள அட்டை வழங்கப்படும் . விவசாயிகள் உள்ளூர் வேளாண் அலுவலகத்தை அணுகி இந்தத் திட்டத்தில் சேரலாம்.
| தொடக்கம் | மண் வள அட்டை திட்டம் 19 பிப்ரவரி 2015 இல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. |
| நோக்கம் | மண்வளத்தை பாதுகாப்பதும், உரங்களின் உபயோகத்தை முறைப்படுத்தவதும் இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். |
| பயனாளிகள் : | • மண்ணின் தன்மை, பாசன நீர், பயிர் மற்றும் பிற உயிரியல் பண்புகளின்
அடிப்படையில் மண்ணின் வளத்தையும் தரத்தையும் இந்த மண்வள அட்டை
நிர்ணயிக்கிறது.
• இந்த அட்டை மண்ணில் உள்ள 12 வகை சத்துக்களை ஆய்வு செய்து வரிசைப்படுத்தி வழங்கும். • இதன் மூலம் மண்வளத்தை கண்காணிக்கவும் மேம்படுத்த இந்த அட்டை ஒரு கருவியாக பயன்படுகிறது. • தேவைக்கேற்ற திட்டமிட்ட உரமிடல் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குகிறது. |
| திட்ட பயனாளிகள் : | அனைத்து விவசாயிகள் |
| மண் வள அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் | • ஆதார் அட்டை எண் • மண் சுகாதார அட்டை எண் • தந்தை பெயர் • தொகுதி • கிராமம் தாலுகா மாவட்டம் பகுதி • மண் வகை • தனிப்பட்ட மண் பகுப்பாய்வு விவரங்கள் • முக்கிய ஊட்டச்சத்து விவரங்கள் • இரண்டாம் நிலை ஊட்டச்சத்து விவரங்கள் • மண் பகுப்பாய்வில் அடிப்படையில் பயிர்களுக்கான பரிந்துரை • சர்வே எண் |
| விண்ணப்பிக்கும் முறை : | • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் “உள் நுழை”
மெனுவை கிளிக் செய்யவும். • கீழ் தோன்றும் மெனுவிலிருந்து மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும். • “உள் நுழைவு பக்கம்” திறக்கும் • “புதிய பயனரை பதிவு செய்க” விருப்பத்தை கிளிக் செய்யவும். • “பயணப் படிவம்” திறக்கும். படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து “சமர்ப்பி” என்பதை கிளிக் செய்யவும். • மண்வள அட்டைக்காக மாதிரிகள் சேகரித்த விவசாயி அருகில் உள்ள வேளாண் மையத்திற்கு சென்று அதன் நிலையை அறிந்து கொள்ளலாம். • அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மண் மாதிரியின் நிலையை சரி பார்க்கலாம். |
| இணையதள முகவரி: | மண் வள அட்டை திட்டம் குறித்த விரிவான தகவல்களையும் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் தொடர்பாகவும் www.soilhealth.dac.gov.in / www.tnagriculture.in/mannvalam/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். |
| திட்ட செயல்பாடு : | • திட்டத்திற்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு ரூபாய் 251.42 கோடி
ஒதுக்கீடு
அளித்துள்ளது. • நாடு முழுவதும் இதுவரை 429 புதிய மண் பரிசோதனை கூடங்கள் 102 நடமாடும் மண் பரிசோதனைக்கூடங்கள். 8,752 சிறிய மண் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
| தொடர்புக்கு: | அருகில் உள்ள மாவட்ட மண் பரிசோதனை கூடம் |
| இந்திய அளவில் பயனடைந்த விவசாயிகள் : | 22 கோடி மண்வள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது |
| தமிழக அளவில் பயனடைந்த விவசாயிகள்: | 70 லட்சம் மண்வள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது |