இத்திட்டத்தின் கீழ் கலப்பின மற்றும் அதிக பால் கறக்கக்கூடிய பசு மற்றும் எருமை மாடுகளை அவற்றின் அன்றைய சந்தை நிலவரத்தின்படி காப்பீடு செய்யப்படுகிறது. காப்பீடில் ப்ரீமீயம் தொகைக்கான மானிய உதவி 50 %. மானியத்தின் முழு தொகையும் மத்திய அரசாங்கமே பொறுப்பேற்கும்.பயனாளிக்கு மானிய நன்மை அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு 2 விலங்குகள் வரை வழங்கப்படுகிறது. கால்நடை இறப்பில் இருந்து பண்ணையாளர்களை காப்பாற்றுவதற்காக காப்பீட்டின் நலனை நிரூபித்து அதனை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடும் இத்திட்டம் முறை படுத்தப்பட்டுள்ளது.
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி மூலம் தொடர்ந்து விவசாயிகள் நலனுக்காக வழங்கப்படுகின்ற விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பகுதிகளை உள்ளடக்கிய காப்பீடு திட்டங்கள்.
இத்திட்டம் உள்நாட்டு, வெளிநாட்டு (அ) கலப்பின கறவை மாடுகள் மற்றும் எருமைகள், கன்றுகள்/பசுமாடுகள் மற்றும் வீரியமான எருதுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பாலிசியின் கீழ் காப்பீடு தொகை விலங்கின் சந்தை மதிப்பை ஒத்திருக்கும். வருடத்திற்கான அடிப்படை ப்ரீமியம் வீதம் காப்பீடு தொகையில் 4% ஆகும். இத்திட்டத்தில் நீண்ட கால தள்ளுபடிகள் கொண்ட நீண்ட கால் காப்பீடுகளும் உள்ளது. விபத்துகள் மற்றும் நோய்கள் காரணமாக மரணம் ஏற்பட்டால் இத்திட்டத்தின் ஈட்டுறுதி கிடைக்கும்.
கலப்பின மற்றும் அயல்நாட்டு மற்றும் குஞ்சுபொரிக்கும் கோழிகளை கவரும் ஒரு விரிவான காப்பீட்டுத்திட்டம். ஒரு பண்ணையில் உள்ள எல்லா பறவைகளும் காப்பீடு செய்யப்பட்டிருக்கவேண்டும். இறைச்சி மற்றும் முட்டையிடும் கோழிகளுக்கான காப்பீடு தொகை (அ) உச்ச மதிப்பு ரூ. 45 மற்றும் ரூ. 75 ஆகும். காப்பீடு காலத்தில் விபத்துகள் மற்றும் நோய் காரணமாக பறவைகளின் இறப்பு ஏற்பட்டால் இத்திட்டத்தில் ஈட்டுறுதி கிடைக்கும்.
அனைத்து உள்நாட்டு, கலப்பின மற்றும் அயல்நாட்டு செம்மறி மற்றும் வெள்ளாடுகளை இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யலாம். காப்பீடு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நோய்கள் காரணமாக மரணம் ஏற்பட்டால் இத்திட்டத்தில் ஈட்டுறுதி கிடைக்கும். செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளின் சந்தை மதிப்பு இனம், இடம், மற்றும் நேரத்தின் அடிப்படையில் மாறிக்கொண்டே இருக்கும். கால்நடை அதிகாரியின் சான்றிதழ் மதிப்பீடு இருக்கும்.
கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இந்திய அரசால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் கலப்பினம் மற்றும் அதிக பால் கறக்கும் பசு மற்றும் எருமை மாடுகளை அவற்றின் பண்ணையாளர், கால்நடை அதிகாரி மற்றும் காப்பீட்டு முகவர்கள் இணைந்து குறித்த சந்தை நிலவரப்படி காப்பீடு செய்யப்படுகிறது.
இதில் 50% காப்பீடு ப்ரீமியம் மானியமாக வழங்கப்படுகின்றது. மானியத்தின் முழு செலவு மத்திய அரசால் ஏற்றுகொள்ளப்படுகின்றது. பயனாளிக்கு மானிய நன்மை அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு 2 விலங்குகள் வரை வழங்கப்படுகின்றது.15௦௦ லிட்டர் கறக்கும் பசு மற்றும் எருமைகளை இத்திட்டத்தில் அவற்றின் சந்தை மதிப்பிற்கிணங்க காப்பீடு செய்யலாம். வேறு காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள விலங்குகளை இத்திட்டத்தில் காப்பீடு செய்ய இயலாது.
இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பயனாளிகளை கிராம பஞ்சாயத்துகள் அடையாளம் காட்டவேண்டும்.
மாநில கால்நடை தொகை பெரும்பாலும் கலப்பின என்பதால் இவை அதிவிரைவாக நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் இழப்பைச் சந்திக்கின்றனர். இதனை ஈடுசெய்யும் வகையில் கேரள அரசின் கால்நடை பராமரிப்புத்துறை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியும் இணைந்து அரசானை எண்: 123/AD தேதி 17/6/1998 -யின் கீழ் ஓர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. சலுகை கட்டண காப்பீடு ப்ரீமியத்தின் விகிதம் 6.6% ஆகும். இத்திட்டம் மாநிலத்தின் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படுகின்றது.
Tamilnadu Veterinary Animal Sciences University,
Madhavaram Milk Colony,
Chennai – 600 051, Tamil Nadu, India
Phone: +91-44-25551586/ 87, 25554555/ 56
The Programme Co-ordinator,
Krishi Vigyan Kendra,
Veterinary College and Research Institute Campus,
Mohanur Road, Namakkal – 637 001
Phone: 04286 – 266345, 266244
E-mail: kvk-namakkal@tanuvas.org.in
The Associate Professor & Head,
Veterinery University Training and Research Centre,
No.63, Kalapattu Pirivu,
Saravanampatty,
Coimbatore – 641 035.
Phone : 0422 – 2669965
E-mail : coimbatorevutrc@tanuvas.org.in