பிரதான் மந்திரி விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம்

  • இந்தியாவில் உள்ள சிறு குறு விவசாயிகள் தங்கள் முதுமை காலத்தில் ஓய்வூதியம் பெறும் வகையில் இத்திட்டம் பிப்ரவரி-15 2019ல் தொடங்கி செயல்பட்டுவருகிறது .

இந்த திட்டத்தின் நோக்கம்:

  • 60 வயதான தகுதியுள்ள சிறு குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியமாக வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்தின் செயல்பாடுகள்:

  • அவருக்கு 60 வயது பூர்த்தி ஆகும் வரை மாதாமாதம் தன் தவனைகளை செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 61-வது வயது தொடங்கும் போது தான் அவருக்கான முதல் 3000 ரூபாய் செலுத்தப்படும்.
  • ஒருவர் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து 60 வயதிற்கு முன்பாக வெளியேற விரும்புகிறார் என்றால் அவருக்கு அவர் செலுத்திய பங்கு மட்டுமே வங்கி சேமிப்புக் கணக்கு வட்டியோடு திருப்பித் தரப்படும். அவர் சார்பாக அரசு செலுத்திய பங்கு கொடுக்கப்படாது.
  • ஒருவேளை இந்த திட்டத்தின் கீழ் மாதா மாதம் பணம் செலுத்துபவருக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு, உடல் ஊனமுற்றால் கூட அவரின் கணவர் அல்லது மனைவி இந்த திட்டத்தை தொடரலாம்.
  • அப்படி இல்லை என்றால் அவரின் பங்கு மற்றும் வட்டியை மட்டும் பெற்றுக் கொண்டு திட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம்.
  • பென்ஷன் காலத்தில் இறந்துவிட்டால் திட்டத்தில் சேர்ந்திருந்தவரின் மனைவிக்கு மட்டுமே 3,000 ரூபாயில் பாதி தொகையான 1,500 ரூபாய் பென்ஷனாக வழங்கப்படும்.
  • திட்டத்தில் இருந்தவரின் மனைவி அல்லது கணவருக்குப் பிறகு யாருக்கும் கொடுக்கப்படாது.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:

  • 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த திட்டம்.
  • 2 ஹெக்டருக்குள் நிலம் வைத்திருக்கும், அதாவது 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
  • விவசாயியின் மனைவி தனியாக பங்கேற்பு நிதி அளித்தால் அவரும் தனியாக மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக பெற தகுதியுடையவர்

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • சேமிப்பு வங்கி கணக்கு எண் நகல்

பதிவு செய்யும் முறை:

  • அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் இதற்கு ரூபாய் 30 மட்டுமே வசூலிக்கப்படும்.

PM-KISAN Maandhan Yojana உதவி மையம்:
Phone:1800-3000-3468
Email:support@csc.gov.in