பிரதான் மந்திரியின் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கும் திட்டம்

விவசாயிகளின் நலன்களுக்குப் பெரிதும் உதவும் வகையில் அவர்களது வருவாயைக் காக்கும் விதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே, காரீப் பருவத்தில் விளையும் வேளாண் பொருட்களுக்கு அவற்றின் உற்பத்திக்கான செலவைப் போல் ஒன்றரை மடங்கு அதிகமான விலையை அரசு அறிவித்துள்ளது. இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகரிப்பு விவசாயிகளுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசுகளுடன் இணைந்து கொள்முதல் செய்யப்படும் இதற்கான பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் பயன்கள்:

இத்திட்டம் விவசாயிகள் போதிய வருவாயைப் பெறுவதை உறுதிசெய்யும். அவையாவன

  • ஆதரவு விலைத் திட்டம் (Price Support Scheme – PSS)
  • விலைப் பற்றாக்குறை வழங்கும் திட்டம் (Price Deficiency Payment Scheme – PDPS)
  • தனியார் கொள்முதல் மற்றும் இருப்புச் சரக்கு முன்னோடித் திட்டம் (Pilot of Private Procurement & Stockist SchemePPSS)

எண்ணெய் வித்துக்களைப் பொறுத்தவரையில் மாநில அரசுகள் தனியார் கொள்முதல் சரக்கிருப்பு திட்டத்தை (PDPS) தங்களது விருப்பத்திற்கேற்ப முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்திக் கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களிலும் வேளாண் உற்பத்திச் சந்தைக் குழுக்களிலும் (APMC) தனியாரின் பங்களிப்பை நடைமுறைப்படுத்தலாம். குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணெய் வித்துக்களின் கொள்முதல் இந்த முன்னோடித் திட்டத்தின்கீழ் இடம்பெறும். இது முன்னோடி மாநிலங்களில் ஆதரவு விலைத் திட்டத்தை (PSS) ஒத்திருப்பதால், அதற்கும் விலைப் பற்றாக்குறை வழங்கும் திட்டத்துக்கும் மாற்றாக அமைந்திருக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் ஏஜென்சிகள் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் விளைபொருட்களை குறிப்பிட்ட சந்தைகளிலிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்து கொள்ளலாம். தனியார் கொள்முதல் மற்றும் சரக்கிருப்பு திட்டத்தின் (PPSS) வழிகாட்டு நெறிகளின்படி இதை மேற்கொள்ளலாம்.

எப்போதெல்லாம் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட வேளாண்பொருள் விலை சரிகிறதோ, எப்போதெல்லாம் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் சந்தையில் ஈடுபடலாம் என அனுமதிக்கின்றனவோ குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15 சதவீதம் அதிகபட்சமாக சேவைக் கட்டணம் செலுத்தப்படலாம்.