உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்
விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு அவர்களால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை மேலும் இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் மிக குறைவான விலைக்கே விளைபொருட்களை வாங்குகிறார்கள், இதை தவிர்க்கவும் விவசாயிகளின் விலை பொருட்களுக்கு லாபமீட்டவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் எவ்வாறு தொடங்குவது:
- பத்திற்கும் மேற்பட்ட முதன்மை விவசாயிகள் மட்டும் இதில் இருக்க வேண்டும்.
- வருமானத்தை மேம்படுத்தக்கூடிய வணிக நடவடிக்கைகளுக்கான திட்டம் இருக்க வேண்டும் .
- இந்த திட்டத்தில் இணையும் விவசாயிகள் இந்த திட்டம் மற்றும் இதன் நன்மைகளை பற்றி நன்கு அறிந்து இருக்க வேண்டும்.
- உறுப்பினர்களாக இருக்கும் விவசாயிகள் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருக்க வேண்டும்.
- எந்த விலை பொருட்களை விற்கபோகிறோம் எப்படி செயல் பட போகிறது போன்ற தகல்வல்களை அடங்கிய வாசகத்தை AOA ( Articles of Association ) யிடம் தெரிவிக்கவேண்டும் பிறகு MOA (memorandum of association )யிடம் தெரிவிக்கவேண்டும்.
- டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்.
- தயாரிப்பாளர் நிறுவனத்திற்கு பெயரிடுதல்.
- மெமோராண்டம் மற்றும் சங்கத்தின் கட்டுரைகள்.
- ROC யிடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
திட்டத்தின் பயன்கள்:
- வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த உதவும்.
- உறுப்பினர்களின் திறமைகளை வெளியே கொண்டு வர உதவும்.
- மக்களை நிறுவனங்களுடன் இனைக்க உதவுகிறது.
- விவசாயிகளின் திறன் மேம்படும்.
- பிற வளர்ச்சித் திட்டங்களுடன் இனைக்க வழிவகுக்கும்.