தேசிய விவசாய மேம்பாட்டு திட்டம்
விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ஊக்குவிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் பயன்கள் :
- மக்களை வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் முதலீடு செய்வதற்கு ஊக்குவித்தல்.
- மாநிலங்களுக்கு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வேளாண் துறையில் செயல்படுத்த அதிகாரம் வழங்குதல்.
- மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் வேளாண் திட்டங்களை வகுப்பதற்கு உத்திரவாதமளித்தல்.
- குறிக்கோளை அடைவதற்கு முக்கிய தானியங்களுக்கான அறுவடை காலத்தை குறைத்தல்.
- அதிகபட்ச ஆதாயத்தை விவசாயிகளுக்கு அளித்தல்.
திட்டத்தின் அடிப்படை தன்மைகள்:
- இது மாநில அளவிலான திட்டம்.
- இந்த திட்டத்தில் அங்கத்தினராக ஒவ்வொரு மாநிலமும் மாநிலத்திட்டச் செலவை வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் அதிகப்படுத்த வேண்டும்.
- மாநிலம் மற்றும் மாவட்ட வேளாண் திட்டங்கள் தயாரிப்பதற்கு உத்தரவிடுதல்.
- இந்த திட்டம் தன்னிச்சையாக பங்கிடப்படுவதில்லை.
- இது மாநில அரசுகளுக்கு அதன் எல்லைக்குட்பட்டு சுதந்திரமாக செயல்பட நெகுழ்வுத் தன்மையை தருகிறது.
- திட்டங்களின் உறுதியான கால நேரங்களை நிர்ணயிப்பதை ஊக்குவித்தல்.
மாநில அளவிலான அங்கீகாரக்குழுவின் பொறுப்புகள்:
- திட்டங்களை ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா கீழ் அங்கீகரித்தல்.
- அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்தல்.
- திட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் உத்திரவாதம் அளித்தல்.
- முயற்சிகள் தவறானவை அல்ல என்பதை உறுதிப்படுத்துதல்.
- திட்டங்களை மதிப்பிடுதல் மற்றும் முறைப்படுத்துதல் தொடர்பான குழு அறிக்கை.
நிர்வாகச் செலவுகள் :
- ஆலோசனை கட்டணம்.
- செயல்படுத்துவதற்கான செலவுகள்.
- செயல்படுத்தும் முகமைக்கான செலவும் பணியாளர்களுக்கான செலவும் .
- நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது.