பிரதான் மந்திரி விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம்
- இந்தியாவில் வேளாண்மை வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற அழிவுகளால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றது.
- இவ்வாறான இயற்கைப் பேரழிவுகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், அடுத்த வேளாண்மைக் காலத்தில் அவர்களது கடன் தகுதியை உறுதி செய்ய, இந்த திட்டத்தை 13 ஜனவரி 2016 ல் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் நோக்கம்:
- விதைப்பு மற்றும் அறுவடை நிலைகளுக்கு இடைப்பட்ட பருவத்தில் உள்ள பயிர்களுக்கு இயற்கை பேரழிவு, நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதல்கள் மற்றும் பருவம் தவறி பெய்யும் மழை மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்படும் பயிர் இழப்பை ஈடு செய் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
- விவசாயிகளின் வருமானம் பாதிப்படையாமல் பாதுகாத்து அவர்கள் விவசாயத்தை தொடர்ந்து செய்வதற்கு உதவுகிறது.
- ஒருவர் காரீப்(சம்பா சாகுபடி) பயிர்களுக்கு 2 சதவித ப்ரீமியத்தையும், ராபி(குறுவை சாகுபடி) பயிர்களுக்கு 1.5 சதவித ப்ரீமியத்தையும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:
- விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தில் சேர தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்பட அடையாள ஆதாரம்.
- விவசாய நிலம் சிட்டா/பட்டா .
- நடவு செய்த தேதி.
- இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
- சேமிப்பு வங்கி கணக்கு எண் நகல்.
- கைப்பேசி எண்.
பதிவு செய்யும் முறை:
- Offline மூலமாக விண்ணப்பிக்க வேண்டுமென்றால் நீங்கள் அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று பஸல் பீமா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- ஆன்லைன் மூலம் பதிவு செய்ய https://pmfby.gov.in/இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடுப் லிங்கை பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=ej8OUN4NoKw&t=104s
பஸல் பீமா யோஜனா உதவி மையம்:
Phone:18002005142 or 1800120909090
Email: help.agri-insurance@gov.in