பாரம்பர்ய வேளாண் வளர்ச்சி திட்டம்
- இயற்கை விவசாயம் செய்பவர்களுக்காகக கொண்டுவரப்பட்ட திட்டமிது.
- மண்ணின் ஆரோகியத்தை மேம்படுத்த்தும்.
- ரசாயன விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்துக்கு மாற நினைப்பவர்கள், மண் வளத்தை மேம்படுத்த நினைப்பவர்கள், சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் என அனைவருக்குமான வரப்பிரசாதம் இத்திட்டம்.
இந்த திட்டத்தின் நோக்கம்:
- இந்த திட்டம் வணிகத்திற்கான வேளாண் பொருள்களின் உற்பத்தியை சான்றளிக்கப்படும்.
- இத்தகைய வேளாண் விளைபொருட்கள் பூச்சிக்கொல்லி மருத்துப்படிவுகள் இல்லாதவையாக, நுகர்வோரின் உடல்நலத்தை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும்.
- விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து வணிகர்களுக்கு சாத்தியப்பட்டுள்ள சந்தையை இது உருவாக்கும்.
- இடுபொருள்கள், விதைகள், பசுந்தாள் உரப் பயிர்கள், நுண்ணுயிர் உரங்கள் ஆகியவை வழங்கப்படுவதோடு மண்புழு உரத்தொட்டி கட்டவும் மானியங்கள் உண்டு.
இந்த திட்டத்தின் பயன்கள்:
- இத்திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு இடுபொருள் தயாரிப்பதற்கான டிரம், ஜக் உள்ளிட்ட உபகரணங்கள், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உபகரணங்கள் போன்றவற்றை வாங்க 25,000 ரூபாயும்.
- மண்புழு உரத்தொட்டி கட்ட ஒரு தொட்டிக்கு 5,000 ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும்.
- இயற்கை விவசாயப் பயிற்சி பெற ஒரு குழுவுக்கு 20,000 ரூபாயும் விதைகளுக்காக ஏக்கருக்கு 500 ரூபாயும் வழங்கப்படும்.
- பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் ஆகியவற்றைத் தயாரிக்க ஏக்கருக்கு 1,500 ரூபாய் வழங்கப்படும்.
- பசுந்தாள் உரச் சாகுபடி, உயிர் உரங்கள், உயிரிப் பூஞ்சணக்கொல்லி ஆகியவற்றுக்கும் நிதியுதவிகள் உண்டு.
- பொருள்களைச் சந்தைக்குக் கொண்டுசெல்ல வாகனம் வாங்க 1,20,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
- இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி மூன்று ஆண்டுகளில் முழு ஈடுபாட்டோடு உழைத்தால், இயற்கை விவசாயம்மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:
- ஒரே கிராமம் அல்லது அருகருகே இருக்கும் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் குழுவாக சேர்ந்து இத்திட்டத்தில் இணையலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
- இந்தத் திட்டத்தில் இணைய ஆர்வமுடைய விவசாயிகள் அந்தந்த மாவட்ட வேளாண் துணை இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை.
- விவசாய நிலம் சிட்டா/பட்டா.
- இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
- சேமிப்பு வங்கி கணக்கு எண் நகல்.
- கைப்பேசி எண்.
பதிவு செய்யும் முறை:
- ஒவ்வொரு குழுவிலும் 50 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
- ஒரு குழுவில் குறைந்தபட்சம் 10 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலமாவது வைத்திருக்க வேண்டும்.
- அதிக நிலம் வைத்திருப்பவர்கள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை இத்திட்டத்துக்காக ஒதுக்கிக் கொண்டும் குழுவில் இணையலாம்.
- மாடு இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இருப்பினும் ஒரு மாடு இருப்பது இயற்கை முறை விவசாயத்துக்கு அவசியம்.
தொடர்புக்கு :
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை,
எழிலகம், சேப்பாக்கம், சென்னை- 600 005,
தொலைபேசி: 044-28513232/34.