பால் பண்ணை தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்

இந்தியாவில் பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்க 2020 ஆம் ஆண்டில் இருமடங்காக உற்பத்தி செய்ய 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டம் தான் பால் பண்ணை தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம். இதில் சிறு விவசாயிகள் , தொழில் முனைவோர் , சுயவுதவி குழுக்கள் மற்றும் விவசாய சங்கங்கள் என அனைவருக்கும் மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம்.இது மாட்டு பண்ணை வைக்க கடன் வழங்கும் NABARD (நபார்டு) வங்கியின் திட்டம். இந்த திட்டத்தில் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க ரூபாய் 7 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த திட்டத்தில் 20 கன்றுகள் வரை வாங்க ரூபாய் 9.70 லட்சம் வரை கடன் பெறலாம்.

இந்தத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள்:

விவசாயிகள் , தனிநபர் தொழில்முனைவோர் , சுயவுதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் இதில் குழுக்களானால் ஒவ்வொரு குழு உறுப்பினரும் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க கடன் பெறலாம் . ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட இத்திட்டத்தில் கடன் பெறலாம். ஆனால் அவர்களின் பண்ணை 500 மீட்டருக்கு மேல் தள்ளி இருக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் பயன் பெறலாம். ரூபாய் 1 லட்சம் வரை கடன் பெற பயனாளியின் பங்கு தொகை தேவையில்லை . அதற்கு மேற்பட்ட கடனுக்கு 10% பயனாளியின் பங்காக கொண்டு வர வேண்டும். வங்கியில் கடன் ரிசர்வ் வங்கியின் நடைமுறைப்படி கொடுக்கப்படும்.

கடன் வழங்கும் வங்கிகள்:

  • வணிக வங்கிகள்.
  • கிராம மற்றும் நகர்ப்புற வங்கிகள்.
  • மாநில கூட்டுறவு வங்கிகள் & மாநில வேளாண் கூட்டுறவு வங்கிகள்.
  • நபார்டு வங்கியில் மறுசுழற்சி நிதி பெறும் நிதி நிறுவனங்கள்.
  • நபார்டு வங்கியில் கடன் பெறும் திட்ட்டங்களுக்கே இது பொருந்தும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பங்கள் தேர்நதெடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நபார்டு வங்கி கடன் வழங்கும். தொழில் முனைவோர் தங்களின் திட்ட அறிக்கைகளை வங்கியில் சமர்பிக்க வேண்டும். வங்கிகள் அதனை பரிசீலனை செய்து சரியாகும் பட்சத்தில் முதல் தவணை பணம் கொடுக்கப்பட்ட பின் வங்கிகள் நபார்டு வங்கியை அணுகி மானியத்தினைப் பெற்று கொள்ளலாம். இவை அனைத்தும் அந்த பகுதியில் உள்ள நபார்டு கிளை அலுவலகத்தில் இரண்டு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். நபார்டு வங்கி வங்கிகளில் இருந்து பெறப்படும் மானியதிற்கான விண்ணப்பங்களை பெற்ற பின் ஒரு கமிட்டி அமைத்து விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஒரு மாதத்திற்குள் உத்தரவு பிறப்பிப்பார்கள். ரீஜனல் அலுவலகம் தாங்கள் பெறும் தகுதியான விண்ணப்பங்களை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி எவ்வளவு தொகை உள்ளதோ அதன்படி கொடுப்பார்கள். முதலில் விண்ணப்பிக்கும் நபருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

https://www.startupindia.gov.in/content/sih/en/government-schemes/dairy-entrepreneurship-development-scheme

உதவி மையம்:

Toll Free Number: 1-800-115-565
Email: dipp-startups@nic.in