பிரதான் மந்திரி விவசாயிகளுக்கான கடன் அட்டை
- நாட்டின் விவசாயிகளின் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 2019 இல் தொடங்கப்பட்டது.
- நாட்டில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது.
- இந்த திட்டத்தின் கீழ், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர், குத்தகை விவசாயிகள், சுய உதவிக்குழுவினர் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
- இதனால் இந்த நெருக்கடி நேரத்தில் தனது நிதி தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.
இந்த திட்டத்தின் நோக்கம்:
- ஒரு விவசாயி, குறுகிய காலத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
- ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கடன் வாங்கிய பின்னர் விவசாயி தனது நிலத்தை அடமானம் வைக்க வேண்டும். விவசாயி கடனுக்கு 7 சதவீத வட்டி செலுத்த வேண்டும்.
- ஆனால் விவசாயி சரியான நேரத்தில் கடனை செலுத்தினால், அவருக்கு வட்டிக்கு மூன்று சதவீத சலுகை வழங்கப்படுகிறது. அதாவது, அவர் 4 சதவீத வீத வட்டி மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:
- விவசாயம், வேளாண்மை சார்ந்த எந்தவொரு நபரும் கிசான் கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்தான்
விண்ணப்பிக்கும் முறை:
- இந்தத் திட்டத்தில் இணைய ஆர்வமுடைய விவசாயிகள் அந்தந்த மாவட்ட வேளாண் துணை இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
- PM-கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு திறந்துள்ள வாடிக்கையாளர்கள் மட்டும் தான் கிஸான் கடன் அட்டை திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்..
- 18 முதல் 75 வயது வரம்பிலானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு துணை விண்ணப்பதாரர் கட்டாயம் அவசியம்.
- மற்றவரின் நிலத்தில் விவசாயம் செய்யும் ஒருவர் கூட இந்த உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது இந்த திட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- முழுமையாக நிரப்பப்பட்ட KCC விண்ணப்ப படிவம்.
- ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்பட அடையாள ஆதாரம்.
- விவசாய நிலம் சிட்டா/பட்டா .
- இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
- சேமிப்பு வங்கி கணக்கு எண் நகல்.
- கைப்பேசி எண்.
பதிவு செய்யும் முறை:
- KCC விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய www.pmkisan.gov.in இணையதளத்திற்கு சென்று Download KCC Form கொடுத்தால் படிவம் பதிவிறக்கமாகிவிடும்.
- Offline மூலமாக விண்ணப்பிக்க வேண்டுமென்றால் நீங்கள் அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று கிஸான் கடன் அட்டை கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- ஆன்லைன் மூலம் பதிவு செய்ய கணக்கு வைத்துள்ள வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகுங்கள்.
- ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடுப் லிங்கை பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=tczgAcRDfn0
PM-KISAN உதவி மையம்:
PM-Kisan Helpline No:011-24300606
Phone:0120-6025109
Email:pmkisan-ict@gov.in