மண்வள அட்டை திட்டம்

நஞ்சைநிலம் மற்றும் புஞ்சை நிலத்தில் உள்ள மண் மாதிரிகளை சேகரித்து மண்வளத்திற்கேற்ப உரங்களை பயன்படுத்தி பயிர் வகைகளை பயிரடவும் இந்த திட்டம் 19 பிப்ரவரி 2015-ல் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கம் :

  • மண்ணின் ரசாயன குணங்களும் தேவையான சத்துகளும் எந்த வகை உரமிட்டாள் கூடுதல் மகசூல் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ள உதவும்.
  • நடமாடும் மண்பரிசோதனை நிலையம் மூலமாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளின் வயல்வெளிகளில் மண்பரிசோதனை செய்து உடனுக்குடன் மண்வள அட்டை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்::

  • நிலம் வைத்துள்ள அணைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • உங்கள் ஊரில் உள்ள துணை தோட்டக்கலைத்துறை அலுவலரை அணுகி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம்.
  • இணையதளம் மூலம் பதிவுசெய்ய https://www.soilhealth.dac.gov.in/.
  • மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மண்வள அட்டையை மண்பரிசோதனை செய்து புதுப்பிக்கவேண்டும்.

உதவி மையம்:

E-Mail: helpdesk-soil@gmail.com
Phone No: 044-25674482.