பிரதான் மந்திரி விவசாயிகளின் மேம்பாட்டிற்காக வழங்கும் நிதி
- மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இந்த நிதி உதவியானது ஏழை விவசாயிகளின் வருவாயாக மட்டுமில்லாமல் பயிர்காலங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் நிதியாகவும் இருக்கும். இதனால் கடன் வாங்குவது குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த திட்டம் 1-12-2018 அன்று துவங்கப்பட்டது .
இந்த திட்டத்தின் நோக்கம்:
- விவசாயிகளின் மேம்பாட்டிற்காக ஆண்டிற்கு ரூபாய் 6000 நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
- மூன்று தவணையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூபாய் 2000 ஆக பிரித்து வழங்கப்படும்.
- இந்தியாவில் நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் இதற்கு தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- ஆதார் கார்டு நகல்.
- விவசாய நிலம் சிட்டா/பட்டா .
- புதிய குடும்ப அட்டை எண் நகல்.
- சேமிப்பு வங்கி கணக்கு எண் நகல்.
- கைப்பேசி எண்.
பதிவு செய்யும் முறை:
- கிராம நிர்வாக அலுவலர் மூலமாகவும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- ஆன்லைன் இணையதளம் மூலம் பதிவு செய்ய www.pmkisan.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யுங்கள்.
- ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடுப் லிங்கை பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=zd03_3vffNg&feature=youtu.be
PM-KISAN உதவி மையம்::
PM-Kisan Helpline No:011-24300606
Phone:0120-6025109
Email:pmkisan-ict@gov.in